UPDATED : நவ 11, 2026 04:36 PM
ADDED : நவ 11, 2026 04:34 PM
அ நிறம் | அளவு
திருப்புத்தூர்: திருப்புத்துாரில் நவ.,14ல் நடைபெறும் ரத்ததான முகாமில் திருப்புத்துார் குருதிக் கொடையாளர்கள் அமைப்பு துவக்கப்பட உள்ளது.
திருப்புத்தூரில் கண்டரமாணிக்கம் ரோடு பிரபா செல்வி மகாலில் நவ.,14ல் ரத்ததானம் முகாம் நடைபெற உள்ளது. சிவகங்கை மருத்துவக் கல்லூரி குருதி வங்கி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கிறிஸ்துராஜா பள்ளி லியோ சங்கம் புதிய பாரதம் அமைப்பு, ஆறுமுக நகர் லயன்ஸ் சங்கம் இணைந்து இந்த முகாமை நடத்துகின்றனர். காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறும் முகாமில் 18 வயதிலிருந்து 60 வயதுக்குட்பட்டவர்கள் ரத்ததானம் செய்யலாம்.
முகாமில் ரத்த தானம் செய்பவர்களை உறுப்பினர்களாக கொண்ட ‛திருப்புத்துார் குருதிக் கொடையாளர்கள் அமைப்பு ’ என்ற அமைப்பை உருவாக்க உள்ளனர்.
