/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மத்திய கூட்டுறவு வங்கிக்கு லாப பங்கீடு ரூ.7.10 கோடி பேரவை கூட்ட தீர்மானம்

ADDED : செப் 25, 2024 04:25 AM
சிவகங்கை, : சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடந்த ஆண்டு லாப பங்கீடாக ரூ.7.10 கோடி பெற்றதை அங்கீகாரம் செய்வதென பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
சிவகங்கையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பேரவை கூட்டம் நடந்தது. மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் சிறப்பு வகித்தார். உதவி பொது மேலாளர்கள் சதீஷ்குமார், அழகுராணி, காசிநாதன், கூட்டுறவு துணை பதிவாளர்கள் பாரதி, நாகராஜன் உட்பட அனைத்து கூட்டுறவு வங்கி செயலாட்சியர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வங்கியின் கடந்த ஆண்டு (2023=2024) லாபம் ரூ.7 கோடியே 10 லட்சத்து 2 ஆயிரத்து 278யை லாப பங்கீடு செய்வதை அங்கீகாரம் செய்வது. மத்திய கூட்டுறவு வங்கியின் பங்கு மூலதனம் ரூ.150 கோடியாக உயர்த்துவதை அங்கீகாரம் செய்வது.
மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற 126 ஊழியர்களுக்கு கருணை ஓய்வூதிய தொகை ரூ.74.34 லட்சத்தை அங்கீகாரம் செய்வது. 108 ஊழியர்களுக்கு கருணை தொகை ரூ.8.85 லட்சம் வழங்கியதை அங்கீகரித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.