ADDED : ஆக 19, 2026 11:58 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை தமிழ் சங்க நிர்வாக செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
முன்னாள் தலைவர் பகீரத நாச்சியப்பன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார்.கண்ணதாசன் நுாற்றாண்டு விழாவில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டது. பொருளாளர் சுப்பையா, துணை தலைவர்கள் முத்துப்பாண்டியன், மாலா, முன்னாள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.பொருளாளர் சுப்பையா நன்றி கூறினார்.
