ADDED : ஆக 19, 2026 11:58 PM

அ நிறம் | அளவு
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தாலுகா அலுவலகம் செல்லும் ரோடு கோழிக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.
இப்பேரூராட்சியில் திண்டுக்கல் ரோடு அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சி பகுதியில் சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகம் செல்ல அங்குள்ள கால்வாயின் ஒரு புறம் அமைக்கப்பட்ட தார் சாலை வழியாகவே பெரும்பாலான மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் அந்த கால்வாய் நெடுகிலும் கோழிக் கழிவு, துர்நாற்றம் வீசக்கூடிய குப்பையை சிலர் தொடர்ந்து கொட்டிச் செல்கின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் போது மக்களும், அலுவலர்களும் துர்நாற்றம் தாங்காமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. கால்வாயை தூர்வாரி கழிவு, குப்பை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
