/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆதீன மடம் கிணற்றில் சடலம் மீட்பு; மூவர் கைது
/
ஆதீன மடம் கிணற்றில் சடலம் மீட்பு; மூவர் கைது
ADDED : ஜூலை 26, 2025 08:32 PM
திருப்புவனம்:திருப்புவனம் அருகே மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான கிணற்றில், ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், திருப்புவனம் போலீசார் மூவரை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முக்குடி கிராமத்தில், மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இங்குள்ள கிணற்றில், ஜூலை, 23 மாலை, அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதந்தது. மதுரை அனுப்பானடி தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் இருந்து சிதைந்த உடல் பாகங்களை மீட்டனர். சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து, உடல் பாகங்களை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
திருப்புவனம் போலீசார், இறந்த நபர் சம்பந்தமாக விசாரித்ததில், அவர், விருதுநகர் மாவட்டம், கொரண்டி கணேசன், என தெரிந்தது. இரண்டு மாதமாக இவர் வீட்டிற்கு வரவில்லை என்றும், அவர் மாயமானது குறித்து இதுவரை எங்கும் புகார் கொடுக்கவில்லை என்றும் தெரிந்தது.
நேற்று திருப்புவனம் போலீசார், மதுரை, பெருங்குடி திருமுருகன், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வாணிகருப்பு, கொரண்டி முத்துசாமி, 22, ஆகிய, மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.