UPDATED : ஜூன் 22, 2026 03:48 PM
ADDED : ஜூன் 22, 2026 03:42 PM
சிவகங்கை:நாட்டரசன்கோட்டை கலாம் உதவும் கரங்கள் சார்பாக புத்தக வெளியீட்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலாம் உதவும் கரங்கள் தலைவர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். பேரூராட்சி சேர்மன் பிரியதர்ஷினி, துணை சேர்மன் கார்த்திகா, கவுன்சிலர்கள் சின்னமருது பாண்டியன், கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். செயலாளர் குணசேகரன் வரவேற்றார். கவிஞர் சரவணப்பாண்டி எழுதிய நுாலை பகீரத நாச்சியப்பன் வெளியிட, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட் பெற்றுக்கொண்டார். 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்று ,பரிசு வழங்கப்பட்டது.
சிவகங்கை தமிழ் சங்கத்தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் பாண்டியராஜன், அரிமா சங்கத் தலைவர் ரமேஷ் கண்ணன், முதன்மை கல்வி அலுவலர் பணி நிறைவு உதயகுமார், மண்டல இயக்குநர் முத்துராஜா, தமிழ்நாடு வீடியோ போட்டோ சங்க மாநில இணைச்செயலாளர் செந்தில்குமார், தலைமையாசிரியர்கள் அறிவழகன், ஸ்டெல்லா மேரி, சிவகங்கை தமிழவையம் நிறுவனர் காளிராஜா உள்ளிட்டோர் பேசினர். பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.
