தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா


ADDED : ஆக 30, 2026 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை தமிழவையம் தொல்நடைக் குழு இணைந்து நடத்திய மரபுக் கண்காட்சி மற்றும் தொல்லியல் பயண நுால் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.

தொல்நடைக்குழு செயலாளர் நரசிம்மன் வரவேற்றார். தலைவர் பகீரத நாச்சியப்பன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் வித்யா முன்னிலை வகித்தார். தொல்லியல் பயணம் என்ற நுாலை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சிவபிரகாஷ் வெளியிட மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.

தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா மதிப்புரை வழங்கி பேசினார். நுாலாசிரியர் ஞானபாண்டியன் ஏற்புரையாற்றினார். தமிழ்ச்சங்கத்தலைவர் ஓவியர் முத்துகிருஷ்ணன், ஜெயச்சந்திரன், வழக் கறிஞர் ராம்பிரபாகர் பேசினர். சுரேஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us