ADDED : ஆக 30, 2026 01:00 AM
அ நிறம் | அளவு
மானாமதுரை: சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்ப பள்ளி பயிற்சியாளர் செல்வம் தலைமையில் மாண வர்கள் கலந்து கொண்டனர்.
இரட்டைக்கம்பு 17 வயது மற்றும் 19 வயதுக்கான ஆண்கள் பிரிவில் ரித்தீஷ் மற்றும் புகழேஷ் முதல் பரிசும், ஒற்றைக்கம்பு பிரிவில் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயது ஆண்கள் பிரிவில் ராஜேஷ், மதன்குமார், ருத்ரன் முதல் பரிசும், பெண்களுக்கான ஒற்றைக்கம்பு 17 வயது மற்றும் 19 வயது பிரிவில் சுவாதி, விஷாலி முதல் பரிசையும், கம்புச்சண்டை பிரிவில் கரண்குமார் முதல் பரிசும், ஆகாஷ், ரோஷினி, மோனிஷ் குமார் மற்றும் விசாக மித்ரா 3ம் பரிசையும் பெற்று முதல் பரிசு வென்ற 8 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.
