ADDED : மார் 14, 2026 08:01 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட மைய நுாலகம் மற்றும் நுாலக நண்பர்கள் திட்டத்தின் சார்பாக நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நுாலகத்தில் புத்தகங்கள் எடுத்து படிப்பதற்கு உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் வரவேற்றார். மாவட்ட மைய தலைமை நுாலகர் வெங்கட்வேல் பாண்டி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலு வலர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார்.
மதுரை வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர் கார்த்திகை தீபன் மாணவர்களுக்கு நுாலக அடையாள அட்டை மற்றும் புத்தகங்களை வழங்கினார்.
எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய நுால் வெளி யிடப்பட்டது. போட்டித் தேர்வு பயிற்சியாளர் மருது விஜயகுமார் பேசினார். நுாலகர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
