நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட நுாலகத்தில் தேசிய நுாலக வார விழா நடைபெற்றது.
மாவட்ட மைய நுாலகர் எம்.வெங்கடவேல் பாண்டி தலைமை வகித்தார். சிவகங்கை டி.எஸ்.பி., அமல அட்வின் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார்.
எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய நாடக நூலை தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் அறிமுகம் செய்து பேசினார். இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், அன்புத்துரை, எழுத்தாளர் ஈஸ்வரன், முத்துக்குமார், செல்லமணி பங்கேற்றனர்.

