/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நுாலகத்திற்குள் நுழையும் குரங்குகளால் புத்தகம் சேதம்
/
நுாலகத்திற்குள் நுழையும் குரங்குகளால் புத்தகம் சேதம்
நுாலகத்திற்குள் நுழையும் குரங்குகளால் புத்தகம் சேதம்
நுாலகத்திற்குள் நுழையும் குரங்குகளால் புத்தகம் சேதம்
ADDED : ஏப் 30, 2025 06:16 AM
எஸ்.புதுார்; எஸ்.புதுார் அருகே பழமையான ஓட்டு கட்டடத்தில் இயங்கும் நுலகத்திற்குள் குரங்குகள் புகுந்து புத்தகங்களை சேதப்படுத்தி விடுகிறது.
இவ்வொன்றியத்தில் புழுதிபட்டி கிளை நுாலகத்துக்கு தனியாக சொந்த கட்டடம் இல்லாததால் அங்குள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது. 60 ஆண்டு பழமையான ஓட்டு கட்டடத்தில் ஏராளமான புத்தகங்கள் பாதுகாப்பற்ற முறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் ஒழுகும் நிலையில், மேலே முறையான தடுப்பு இல்லாததால் குரங்குகள் உள்ளே புகுந்து புத்தகங்களை நாசம் செய்கிறது.
இதனால் சிறுவர்கள் நுாலகத்திற்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.
எனவே இந்நுா லகத்திற்கு புதிய கட்டடம் கட்டி தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.