/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாடுகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க எல்லையில் தடுப்பு வேலி
/
மாடுகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க எல்லையில் தடுப்பு வேலி
மாடுகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க எல்லையில் தடுப்பு வேலி
மாடுகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க எல்லையில் தடுப்பு வேலி
ADDED : ஜூலை 10, 2025 02:51 AM

காரைக்குடி: சாக்கோட்டை அருகே ஊர் எல்லையில் தடுப்பு வேலி அமைத்து, கிராம மக்கள் மாடுகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாத்து வருகின்றனர்.
சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மானாவாரி விவசாயமே அதிக அளவில் நடைபெறுகிறது. தற்போது, கண்மாய்களில் போதிய தண்ணீர் இல்லாததால் கோடை விவசாயத்தில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபடவில்லை. சாக்கோட்டை அருகே உள்ள நென்மேனியில், கண்மாய் பாசனம் மூலம் விவசாயம் நடந்து வருகிறது.
விவசாயத்தின் போது கோயில் மாடுகள் பயிர்களை மேய்ந்து சேதப்படுத்துவதால், கிராம மக்கள் ஊர் எல்லையில் பாதுகாப்பு வேலி அமைத்துள்ளனர்.
விவசாயி காசி கூறுகையில்: தேவகோட்டை அருகே கோயில் மாடுகள் உள்ளன. விவசாய நேரத்தில், கூட்டமாக வந்து பயிர்களை மேய்ந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஊர் எல்லையில் இருபுறமும் பாதுகாப்பு வேலி அமைத்துள்ளோம். விவசாய நேரத்தில் நடுவில் கேட் அமைத்து விடுவோம். ஊருக்குள் வருபவர்கள் கேட்டை திறந்து மூடிக் கொள்ளலாம்.