/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தல் பணிக்கு எல்லை பாதுகாப்பு படை
/
தேர்தல் பணிக்கு எல்லை பாதுகாப்பு படை
ADDED : மார் 10, 2026 04:59 AM
சிவகங்கை: சிவகங்கையில் சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பி.எஸ்.எப்., எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 90 வீரர்கள் நேற்று சிவகங்கை வந்தனர்.
மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள்அமலுக்கு வரும் நாளிலிருந்து விதிமுறைகளை பின்பற்றி பணியாற்ற மாவட்ட போலீசார் மற்றும் வருவாய் துறை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போலீசாரை உள்ளடக்கி தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்,போலீசார் எந்த விதமான பணிகளை மேற்கொள்ள வேண்டும், மற்ற துறைகளுடன் இணைந்து வேலை செய்வது,தேர்தல் நாள், அதற்கு முந்தைய நாளில் போலீசாரின் பணிகள், வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் அரசியல்கட்சிகளை அணுகுவது, ஒட்டுப்பதிவு மையத்தில் பாதுகாப்பு, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள்,விநியோகிப்பதை தடுக்கவும், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் அல்லது பொருட்களைபறிமுதல் செய்யவும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுறுத்தப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 5 சப் டிவிஷன்களிலும் போலீசாருடன் சேர்ந்து பணி செய்ய நேற்று பி.எஸ்.எப்., எல்லை பாதுகாப்பு படையினர் 90 பேர் சிவகங்கை வந்தனர்.

