/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின்கம்பத்தில் மோதிய போர்வெல் லாரி
/
மின்கம்பத்தில் மோதிய போர்வெல் லாரி
ADDED : மே 24, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார் எஸ்.புதுாரில் மின்கம்பத்தில் போர்வெல் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர், பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பொன்னமராவதி - துவரங்குறிச்சி ரோட்டில் எஸ்.புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக சென்றுகொண்டிருந்த போர்வெல் லாரி அப்பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த மின்கம்பம் மீது மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து லாரி மீது விழுந்தது. ரோட்டில் மின்கம்பி சாய்ந்து தீப்பொறி பறந்தன. உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இவ்வொன்றியத்தில் ரோட்டாரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை தள்ளி ஊன்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.