நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் இன்ஸ்டாகிராமில் வாளுடன் ஸ்டேட்டஸ் வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கீழக்கண்டனி மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் கையில் வாளுடன் இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இந்த பகுதியில் ஏற்கனவே இருதரப்பினர்களுக்கிடையே பிரச்னை இருந்து வருவதால் மேலும் பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்காக போலீசார் அந்த சிறுவனை கைது செய்து அவரிடம் இருந்த வாளை பறிமுதல் செய்தனர்.

