ADDED : ஏப் 12, 2025 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை அள்ளிச் சென்றனர்.
கிருங்காக்கோட்டை சடையாண்டி கோயில் உண்டியலை ஏப். 10 ம் தேதி இரவு மர்ம நபர்கள் உடைத்து உள்ளே இருந்த பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். நேற்று காலையில் கோயிலுக்கு வந்த கிராம மக்கள் உண்டியல் கதவு திறக்கப்பட்டு சில்லறை பணம் சிதறி கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் பல்வேறு கோயில்களில் தொடர் உண்டியல் திருட்டு நடைபெற்ற நிலையில், தற்போது கொள்ளையர்கள் மீண்டும் உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.