ADDED : மே 28, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:காரைக்குடி அருகே உள்ள நேமத்தான்பட்டியை சேர்ந்தவர் முத்தையா 64. இவர் மே 1ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார்.
முத்தையா வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே யாரோ சென்றிருப்பதாகஅக்கம் பக்கத்தினர் அவருக்கு தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவை உடைத்து உள்ளே இருந்த அரை கிலோ வெள்ளி விளக்கு,மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுஉள்ளது தெரிய வந்தது.