ADDED : மே 17, 2025 01:04 AM

திருப்பாச்சேத்தி: மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் ரோட்டில் நொறுங்கிய பாட்டில் சிதறல்களைபோலீசார் சுத்தம்செய்தனர்.
பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி மதுரைக்கு பழைய பேப்பர், பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில் உள்ளிட்டவை மதுரையில் உள்ள மொத்த பழைய பொருட்கள் கடைகளுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் ராமநாதபுரத்தில் இருந்து பழைய கண்ணாடி பாட்டில் மூடைகளை ஏற்றிய லாரி மதுரை சென்றது. திருப்பாச்சேத்தி அருகே வரும் போது கயிறு தளர்ந்து கண்ணாடி பாட்டில் மூடைகள் வரிசையாக ரோட்டில் விழுந்து சிதறியது. ரோடு முழுவதும் கண்ணாடி சிதறல் பரவி கிடந்த நிலையில் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஏறி இறங்கிய நிலையில் பஞ்சராகி நின்றன.
நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கண்ணாடி சிதறல்களை ரோட்டோரம் அப்புறப்படுத்தினர். இரவு நேரத்தில் ஆட்கள் கிடைக்காத நிலையில் போலீசாரும் வாகன ஓட்டிகளும் சிதறி கிடந்த கண்ணாடி சிதறல்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.