/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உடைந்த நம்பியூர் தரைப்பாலம் போக்குவரத்தில் சிக்கல் உருவானது
/
உடைந்த நம்பியூர் தரைப்பாலம் போக்குவரத்தில் சிக்கல் உருவானது
உடைந்த நம்பியூர் தரைப்பாலம் போக்குவரத்தில் சிக்கல் உருவானது
உடைந்த நம்பியூர் தரைப்பாலம் போக்குவரத்தில் சிக்கல் உருவானது
ADDED : ஜன 18, 2025 07:44 AM

தேவகோட்டை : தேவகோட்டை அருகே கண்ணங்குடி செல்லும் கிராமங்கள் வழியாக தேனாறு ஓடுகிறது.இந்த ஆறு பல கிராமங்களில் குறுக்கிடுவதால் வழியில் பல இடங்களில் தரைப் பாலமாக கட்டி உள்ளனர்.
இந்த பாலத்தின் அடியில் மண் அதிகமானதால் தேரளப்பூர் அருகே நெட்டேந்தல் தரை பாலத்தில் காரைக்குடி தேனாற்றில் வழக்கத்தை விட சிறிது கூடுதலாக தண்ணீர் வந்தாலும் தரைப்பாலம் மேலே தண்ணீர் சென்று 15 கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த பாலம் தற்போது சேதமடைய துவங்கி விட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் பொய்யாமொழி நம்பியூர் இடையே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் போக்குவரத்து அதிகமானதால் உடைந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பாலம் கட்டப்பட்ட போது தனித்தனி கட்டங்களாக கான்கிரீட் போடப்பட்டது போல் அமைக்கப்பட்டதால் தற்போது தனித்தனியாக பெயர்ந்து உள்ளது. பாலத்தின் நடுவே இரண்டு இடங்களில் முழுவதும் உடைந்து பெரும் பள்ளம் உருவாகி விட்டது.
இந்த பாலத்தின் வழியாக கொத்தங்குடி இடையன் காளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். தற்போது உள்ள நிலையில் நம்பியூர்பாலம் எந்த நேரத்திலும் முழுவதும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
சப் கலெக்டர், ஒன்றிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பாலத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.