/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் கஞ்சா கடத்தல் காருடன் அண்ணன், தம்பி கைது
/
சிவகங்கையில் கஞ்சா கடத்தல் காருடன் அண்ணன், தம்பி கைது
சிவகங்கையில் கஞ்சா கடத்தல் காருடன் அண்ணன், தம்பி கைது
சிவகங்கையில் கஞ்சா கடத்தல் காருடன் அண்ணன், தம்பி கைது
ADDED : அக் 03, 2025 03:06 AM

சிவகங்கை: : சிவகங்கையில் போலீசார் வாகன சோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட 24 கிலோ கஞ்சா பொட்டலங்களையும், அதனை கடத்தி வந்த சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு ராஜேந்திரன் மகன்கள் -தனசேகரன் 37, தனபால் 33 ஆகியோரையும் போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை போலீசார் மானாமதுரை - தஞ்சாவூர் பைபாஸ் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரைக்குடியில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் படி, காரை மறித்தபோது தப்பி சென்றனர்.
அவர்களை போலீசார் விரட்டி கீழக்குளம் ரோட்டில் வைத்து பிடித்தனர். கார், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.