ADDED : அக் 03, 2025 03:09 AM
சிவகங்கை: இந்திய அளவில் தபால் நிலையங்களில் விரைவு தபால் (ஸ்பீடு போஸ்ட்) அனுப்புவதற்கான கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தபால் அலுவலகங்கள் மூலம் விரைவு தபால் அனுப்புவதற்கு புதிய கட்டணத்தை அத்துறை மாற்றி அமைத்துள்ளது. இப்புதிய கட்டணம் அக்., 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. உள்ளூருக்குள் அனுப்ப 50 கிராமிற்கு ரூ.19, 51 கிராம் முதல் 250 கிராமிற்கு ரூ.24, 251 கிராம் முதல் 500 கிராமிற்கு ரூ.28. 200 கி.மீ., முதல் 2000 கி.மீ., துாரத்திற்கு மேல் செல்லும் தபாலுக்கு 50 கிராம் வரை ஒரே விதமாக ரூ.47 மட்டுமே கட்டணம்.
200 கி.மீ., துாரம் செல்ல 51 முதல் 250 கிராமிற்கு ரூ.59, 251 கிராம் முதல் 500கிராமிற்கு ரூ.70. 201 முதல் 500 கி.மீ., துாரம் வரை செல்ல 51 முதல் 250 கிராமிற்கு ரூ.63, 251 கிராம் முதல் 500 கிராமிற்கு ரூ.75. 501 முதல் 1000 கி.மீ.,துாரம் வரை செல்ல 51 முதல் 250 கிராமிற்கு ரூ.68, 251 கிராம் முதல் 500 கிராமிற்கு ரூ.82. 1001 முதல் 2,000 கி.மீ., துாரம் செல்ல 51 முதல் 250 கிராமிற்கு 72, 251 முதல் 500 கிராமிற்கு ரூ.86. 2000 கி.மீ., துாரத் திற்கு மேல் செல்ல 51 முதல் 250 கிராமிற்கு ரூ.77, 251 முதல் 500 கிராமிற்கு ரூ.93 என தபால் துறை கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அனைத்திற்கும் ஜி.எஸ்.டி., கூடுதலாக செலுத்த வேண்டும்.
கல்வி நிறுவனங்களுக்கு விரைவு தபால் அனுப்பும் மாணவர்களுக்கு (நவ., 1 முதல் அமல்) கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி உண்டு. அதே போன்று மொத்தமாகவும், புதிதாக ஒப்பந்தம் செய்தும் விரைவு தபால் அனுப்பும் வாடிக்கையாளருக்கு 5 சதவீத தள்ளுப டி உண்டு. குறுஞ்செய்தியுடன் (ஓ.டி.பி.,) அனுப்ப ரூ.5 கட்டணம் விதிக்கப்படும்.