/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை, ராமநாதபுரத்தில் விரைவில் முழுமையான 4 ஜி சேவை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தகவல்
/
சிவகங்கை, ராமநாதபுரத்தில் விரைவில் முழுமையான 4 ஜி சேவை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தகவல்
சிவகங்கை, ராமநாதபுரத்தில் விரைவில் முழுமையான 4 ஜி சேவை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தகவல்
சிவகங்கை, ராமநாதபுரத்தில் விரைவில் முழுமையான 4 ஜி சேவை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தகவல்
ADDED : ஜன 30, 2025 05:23 AM
காரைக்குடி: சிவகங்கை, ராமநாதபர மாவட்டத்தில்  4 ஜி சேவை முழுமையாக பெறுவதற்கான செயல்பாடு முழுவீச்சில் நடைபெறுவதாகவும், இதன் மூலம் வருவாய் அதிகரிக்கும் என பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரைக்குடி பி.எஸ்.என்.எல்.,  அலுவலகத்தில் தொலைத் தொடர்பு ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. கார்த்தி எம்.பி., தர்மர் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர். பொது மேலாளர் லோகநாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கிராமப்புறங்களில் பிஎஸ்என்எல் சேவை கிடைக்காதது குறித்தும், ரீசார்ஜ் கூட செய்ய முடியாத நிலை இருப்பதாகவும்,  பள்ளிகளில் இணைய சேவை கிடைக்காமல் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாவதாக புகார் எழுப்பினர். மேலும் மின்தடை ஏற்பட்டால் பல மணி நேரம் தொலைதொடர்பு துண்டிப்பதாகவும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கார்த்தி எம்.பி., பல்வேறு கேள்விகளை எழுப்பினார். டவர் கிடைக்காத கிராமப்புறங்களுக்கு சர்வே எடுக்க அதிகாரிளை அழைத்துச் செல்ல வலியுறுத்தினார்.
பொது மேலாளர் லோகநாதன் கூறுகையில்:  சிவகங்கை, ராமநாதபுரம் பகுதியில், 19 ஆயிரம் இணைப்புகள் உள்ளது.  246 டவர்கள் மூலம் இரு மாவட்டங்களிலும் 2ஜி மற்றும் 3ஜி சேவை வழங்கப்படுகிறது. 4 ஜி சேவையும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இரு மாவட்டங்களையும் சேர்த்து 70 டவர்களில் 4 ஜி பொருத்தப்பட்டுள்ளது. இன்னும்  2 மாதங்களில் 4 ஜி சேவை வழங்குவதற்கான பணி முழுமையாக முடிந்துவிடும்.  இதன்மூலம் இணையம் உட்பட அனைத்து சேவையிலும் வேகம் அதிகரிக்கும்.  இதுவரை, சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.25 லட்சம் பி.எஸ்.என்.எல்., அலைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தவிர, எப்.டி.டி.எச். எனப்படும் பைபர் டூ தி ஹோம் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,  வரும் ஆண்டுகளில் வருவாய் மேலும் அதிகரிக்கும்.

