ADDED : அக் 14, 2024 08:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஏழுவளவு மறவர் இளைஞர்கள் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 50 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் இருந்து மருதிப்பட்டி வரை 12 கி.மீ., தூரம் பந்தய இலக்கு வைத்திருந்தனர். பெரிய, சின்ன மாடுகள் என 3 பிரிவாக போட்டி நடந்தது. சிங்கம்புணரி நாட்டார்கள் துவக்கி வைத்தனர். வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகை, கோப்பை வழங்கினர்.