ADDED : டிச 23, 2024 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே பெரியகண்ணனுாரில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது.
பெரிய, சிறிய மாடு பிரிவு நடந்த போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 32 ஜோடிகள் பங்கேற்றன.
இளையான்குடி -- சிவகங்கை ரோட்டில் நடந்த இந்த போட்டியில் பெரிய மாடு பிரிவில் 8 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 24 ஜோடிகள் பங்கேற்றன.
பெரிய மாட்டுக்கு 8 கி.மீ., சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ., துாரம் எல்கை வைத்தனர். இதில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினர்.