/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் மாட்டு வண்டி பந்தயம்
/
திருப்புத்துாரில் மாட்டு வண்டி பந்தயம்
ADDED : ஜூலை 20, 2025 11:21 PM

திருப்புத்துார்: திருப்புத்துாரில் அழகுமுத்துக்கோன் குருபூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
இப்போட்டி திருப்புத்துார் -- மதுரை ரோட்டில் நடந்தது. வீரயாதவ சமுதாய அறக்கட்டளை நிறுவனம் மாணிக்கம், தி.மு.க., நாராயணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பெரிய மாட்டு பிரிவில் 11, சிறிய மாட்டு பிரிவில் 21 வண்டிகள் பங்கேற்றன.
பெரிய மாட்டு பிரிவில் முதலிடம் காரைக்குடி அழகுதேவி, இரண்டாமிடம் நகரம்பட்டி வைத்யா, மூன்றாமிடம் குளக்கட்டைப்பட்டி உமர் ராவுத்தர், நான்காமிடம் கோம்பை ராஜா, ஐந்தாமிடம் சுண்ணாம்பிருப்பு நாகராஜன் ஆகியோரின் வண்டிகள் வெற்றி பெற்றன.
சிறிய மாட்டுபிரிவில் முதலிடம் ரணசிங்கபுரம் கருப்பு, இரண்டாமிடம் நீலக்குடிப்பட்டி கல்யாணி, மூன்றாமிடம் பாகனேரி புகழேந்தி, நான்காமிடம் அவனியாபுரம் மோகன், ஐந்தாமிடம் ரணசிங்கபுரம் வினோத் ஆகியோரின் மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன. இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.