ADDED : நவ 24, 2025 08:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவிலில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பிரிவில் 20, சின்ன மாடு பிரிவில் 18 வண்டிகள் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து பங்கேற்றன. பெரிய மாட்டிற்கு 8 கிலோ மீட்டர் துாரமும், சின்ன மாட்டிற்கு 6 கிலோ மீட்டர் துாரமும் பந்தய துாரமாக நிர்ணயிக்கப்பட்டது.
போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளருக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா குழுவால் பரிசு வழங்கப்பட்டது.

