/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டூவீலர் மீது பஸ் மோதல்: ஒருவர் கால் துண்டிப்பு
/
டூவீலர் மீது பஸ் மோதல்: ஒருவர் கால் துண்டிப்பு
ADDED : ஜூலை 22, 2025 11:47 PM
திருப்புத்துார்; திருப்புத்துார் அருகே சிவகங்கை ரோட்டில் பஸ் மோதியதில் டூவீலரில் வந்த இருவர் படுகாயமடைந்தனர். ஒருவரது கால் துண்டானது.
திருக்கோஷ்டியூர் அருகே பூமலந்தான்பட்டியைச் சேர்ந்த சின்னக்காளை மகன் கருப்பையா40. அதே ஊரைச் சேர்ந்த சின்னக்கருப்பன் மகன் பூமிநாதன் 42.
இருவரும் நேற்று முன்தினம் திருவிழாவிற்காக இரவு 10:30 மணிக்கு திருப்புத்துாரிலிருந்து பொருட்கள் வாங்கிக் கொண்டு பூமலந்தான்பட்டிக்கு டூவீலரில் சென்றனர். (ஹெல்மெட் அணிய வில்லை).
சிவகங்கை ரோட்டில் பாப்பான் கண்மாய் அருகே செல்லும் போது, சிவகங்கையிலிருந்து சென்னை சென்ற தனியார் பஸ் நேருக்கு நேராக டூ வீலர் மீது மோதியது.
டூ வீலரில் சென்ற இருவரும் துாக்கி வீசப்பட்டனர். அதில் டூவீலரை ஓட்டி வந்த கருப்பையாவின் வலது காலில் கணுக்கால் கீழே வெட்டப்பட்டு துண்டானது.
பூமிநாதனின் வலது காலும் காயமடைந்தது. இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
டாக்டர் முத்து சிங்காரம் விபத்தில் துண்டான கருப்பையாவின் காலை ஐஸ் பெட்டியில் வைத்து பதப்படுத்தி மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பூமிநாதன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்புத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.