/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
4 வழித்தடங்களில் பஸ் சேவை துவக்கம்
/
4 வழித்தடங்களில் பஸ் சேவை துவக்கம்
ADDED : நவ 22, 2025 02:47 AM
திருப்புத்துார்:திருப்புத்துாரில் நான்கு புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.
திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வழித்தடங்களில் நான்கு புதிய பஸ் சேவைகளை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கினார். திருப்புத்துாரிலிருந்து அ.முறையூர் வழியாக சிங்கம்புணரி, தேவகோட்டையிலிருந்து கடம்பூர் வழியாக திருப்புனவாசல், சிவகங்கையிலிருந்து புதுக்குளம் வழியாக முடிக்கரை, திருப்புத்துா லிருந்து கொழிஞ்சிப்பட்டி வழியாக காடமுத்தான்பட்டி ஆகிய நான்கு பஸ் சேவைகள் துவக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கோகிலாராணிநாராயணன், முன்னாள் ஊராட்சிஒன்றிய தலைவர் சண்முகவடிவேலு மற்றும் போக்குவரத்து அதிகாரிகள்,பணியாளர்கள் பங்கேற்றனர்.

