/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ் ஸ்டாண்ட் பாதை மறைப்பு பயணிகள் கடும் பாதிப்பு
/
பஸ் ஸ்டாண்ட் பாதை மறைப்பு பயணிகள் கடும் பாதிப்பு
ADDED : மார் 22, 2025 04:57 AM
சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்டில் புதிய பஸ் ஸ்டாண்டிற்கான கட்டுமான பணி நடைபெறும் நிலையில் பழைய பாதை அடைக்கப்பட்டுள்ளது.
சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் வளாகம் குறுகிய இடத்தில் போதிய வசதிகள் இல்லாமல் செயல்பட்டதால் சில வாரங்களுக்கு முன்பு சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அமைச்சர் பெரிய கருப்பன்புதிய பஸ் ஸ்டாண்டிற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
தற்போது ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிற நிலையில் பஸ் ஸ்டாண்டை ஒட்டி இருந்த பாதை வழியாக தான் வரகுனேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வந்தனர். தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் புது பஸ் ஸ்டாண்ட் கட்டடங்கள் இந்த பாதையை மறைத்து நடைபெற்று வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.