/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைப்பணியால் சுற்றி செல்லும் பஸ்கள்
/
சாலைப்பணியால் சுற்றி செல்லும் பஸ்கள்
ADDED : ஜூன் 28, 2025 11:40 PM
காரைக்குடி: காரைக்குடி செஞ்சை சாலையில் மழைநீர் கால்வாய் மற்றும் சாலை பணி மந்த கதியில் நடப்பதால் பஸ்கள் மானகிரியை சுற்றி செல்கிறது.
காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் பஸ்கள் செக்காலை ரோடு, கல்லுக்கட்டி செஞ்சை, ரஸ்தா வழியாக தேவகோட்டை செல்லும். தேவகோட்டையில் இருந்து காரைக்குடி வரும் பஸ்களும் ரஸ்தா செஞ்சை கல்லுக்கட்டி வழியில் திரும்பும்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை பணி காரணமாக பஸ்கள் மானகிரி வழியாக சுற்றி விடப்பட்டது. பணி முடிந்து பஸ்கள் நேரடியாக சென்று வந்தது.
தற்போது மீண்டும், செஞ்சை செல்லும் சாலையில் பல நாட்களாக வரத்து கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது,
தவிர, புதிய சாலை பணியும் நடந்து வருகிறது. இதனால் பஸ்கள் இவ்வழியாக செல்லாமல் கோவிலுார் மானகிரி வழியாக சுற்றி செல்கிறது. இதனால் பயணிகள், செஞ்சை செல்ல முடியாமல் ரஸ்தா வரை சென்று திரும்ப வேண்டி உள்ளது.
பணிகளை விரைந்து முடித்து, பஸ்சை செஞ்சை வழியாக விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.