/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பங்கு சந்தையில் முதலீடு என வணிகரிடம் ரூ.87 லட்சம் மோசடி
/
பங்கு சந்தையில் முதலீடு என வணிகரிடம் ரூ.87 லட்சம் மோசடி
பங்கு சந்தையில் முதலீடு என வணிகரிடம் ரூ.87 லட்சம் மோசடி
பங்கு சந்தையில் முதலீடு என வணிகரிடம் ரூ.87 லட்சம் மோசடி
ADDED : ஏப் 03, 2025 02:13 AM
தேவகோட்டை:சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவரிடம், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் லாபம் அதிகம் கிடைக்கும் எனக்கூறி, 87 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரை சேர்ந்தவர் சந்திரன், 88. வணிகரான இவரது வாட்ஸாப் எண்ணில் ஜன., 13ல் பேசியவர், பிரபல வெளிநாட்டு வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிவதாக கூறினார்.
மேலும் பங்குச்சந்தை ஆலோசகராகவும் உள்ளதாக கூறினார். புதிதாக வெளியாகும் பங்குகளில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி சந்திரனை நம்ப வைத்தார்.
இதையடுத்து, சந்திரன் தன் வங்கி கணக்குகளில் இருந்து, 87 லட்சம் ரூபாயை, அந்த நபர் கூறிய பங்குகளில் முதலீடு செய்தார். அந்த பணத்தை தன் கணக்குக்கு மாற்றி ஏமாற்றினார். சந்திரன் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.
இது தொடர்பான புகாரின்படி, சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.