/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பைபாஸ் பஸ் ஸ்டாப், சர்வீஸ் ரோடு; மானாமதுரையில் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
பைபாஸ் பஸ் ஸ்டாப், சர்வீஸ் ரோடு; மானாமதுரையில் வாகன ஓட்டிகள் தவிப்பு
பைபாஸ் பஸ் ஸ்டாப், சர்வீஸ் ரோடு; மானாமதுரையில் வாகன ஓட்டிகள் தவிப்பு
பைபாஸ் பஸ் ஸ்டாப், சர்வீஸ் ரோடு; மானாமதுரையில் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஏப் 08, 2024 11:54 PM

மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் அமைந்துள்ள மானாமதுரை வழியாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மானாமதுரை பைபாஸ் ரோடு பஸ் ஸ்டாப்பில்இருந்து மதுரை, ராமேஸ்வரம் வழியாக செல்லும்பஸ்களில் தினமும் நுாற்றுக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர்.
மானாமதுரை கீழ்கரை பகுதியை சேர்ந்த பைபாஸ் பஸ் ஸ்டாப்பில்இறங்கி சர்வீஸ் ரோடு வழியாக அண்ணாத்துரை சிலை வந்து பின்னர் தங்களது பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டும்.
இப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் பஸ்களில்இருந்து இறங்கி வரும் பயணிகள் அச்சப்பட்டு வருகின்றனர்.
மேலும் பைபாஸ் பஸ் ஸ்டாப் பகுதியிலும் மின்விளக்கு எரியாததால் அங்கு பஸ் ஏற முடியாத நிலை. இறங்கி வரும் பயணிகளும் ரோட்டை கடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பயணிகள்கூறுகையில், மானாமதுரை பைபாஸ் பஸ் ஸ்டாப், நான்கு வழிச்சாலையை ஒட்டி மின் விளக்குகள் போடப்பட்டிருந்தன. தற்போது அவற்றில் ஒரு சில விளக்குகள் மட்டுமே எரிகின்றன. அப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது.
நான்கு வழிச்சாலை நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே பயணிகளின் நலன் கருதி விரைவாக பைபாஸ் ரோடு பஸ் ஸ்டாப் மற்றும் சர்வீஸ் ரோடு ஆகிய பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

