தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மழை நீர் சேகரிப்பு அமைக்க வேண்டுகோள்

மழை நீர் சேகரிப்பு அமைக்க வேண்டுகோள்

மழை நீர் சேகரிப்பு அமைக்க வேண்டுகோள்


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: மானாமதுரை நக ராட்சிக்குட்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் முத்துச்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை முறையாக சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதன் மூலமே எதிர்வரும் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும்.

ஆகவே மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு தொட்டி பெரும்பாலான இடங்களில் முறையாக பராமரிக்கப் படாமல் தூர்ந்து உள்ளன.

இதனால் விலை மதிப்பற்ற மழை நீர் பூமிக்குள் செல்லாமல் சாலை மற்றும் வடிகால் வழியாக வீணாக வெளியேறி வருகிறது. ஆகவே அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே நகராட்சிக்குட்பட்ட அனைத்து பழைய மற்றும் புதிய வீடுகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், தனியார் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி களை உடனடியாக புதுப்பிக்கவும் இல்லாதவர்கள் புதிதாக அமைக்க வேண்டி யது அத்தியாவசியமான அவசர பணியாக உள்ளது.

இப்பணிகளை மேற்கொள்ள 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. அதன் பிறகு நகராட்சி அலுவலர்கள் மூலமாக வார்டு வாரியாக ஆய்வு செய்யப்பட உள்ளதால் அனைவரும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us