UPDATED : நவ 29, 2026 12:00 AM
ADDED : நவ 28, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
திருப்புவனம்: ஏனாதியில் விவசாயி களுக்கான காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
காரைக்குடி செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் ஊரக வேளாண் அனுபவப் பயிற்சியின் ஒரு பகுதியாக ஏனாதி கிராமத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள், காளான் வளர்ப்பிற்கு தேவையான இட வசதி,மூலப் பொருட்கள், வைக்கோல் தயாரிக்கும் முறை, காளான் விதை இடுதல், பைகள் தயாரித்தல் உள்ளிட்டவை பற்றிய பயிற்சி வழங்கப்பட்டன.
மேலும் காளானில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பற்றியும் கூடுதல் வருமானம் ஈட்டவும் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டன.
