தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஐ.டி.ஐ., மாணவர்கள் வளாக நேர்காணல்

ஐ.டி.ஐ., மாணவர்கள் வளாக நேர்காணல்

ஐ.டி.ஐ., மாணவர்கள் வளாக நேர்காணல்


ADDED : மே 11, 2025 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2025 11:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை; மானாமதுரையில் புதிதாக திறக்கப்பட்ட அரசு ஐ.டி.ஐ.,யில் பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கு வளாக நேர்காணல் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மானாமதுரை பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு முதல் புதிதாக அரசு ஐ.டி.ஐ., ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது தற்காலிகமாக ராஜகம்பீரத்தில் தனியார் கட்டடத்தில் ஐ.டி.ஐ., செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2ஆண்டுகளாக பல்வேறு பாடப் பிரிவுகளில் பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கு கோயம்புத்துார், மதுரை, பூவந்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களால் வளாக நேர்காணல் நடத்தப்பட்டு ஏராளமான மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அரசு ஐ.டி.ஐ.,யில் பயிலும் மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைத்து வருவதால் வருகிற கல்வியாண்டிற்காக விரைவில் நடைபெற உள்ள மாணவர் சேர்க்கையில் இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தொழிற்கல்வியை கற்க முன்வர வேண்டுமென்றும், மானாமதுரை,சிவகங்கை ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ஐ.டி.ஐ., கட்டடம் விரைவில் திறப்பு விழா நடத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us