/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி பாலாற்றில் மீண்டும் வெள்ளம் முறைப்படுத்தப்படுமா தண்ணீர் திறப்பு
/
சிங்கம்புணரி பாலாற்றில் மீண்டும் வெள்ளம் முறைப்படுத்தப்படுமா தண்ணீர் திறப்பு
சிங்கம்புணரி பாலாற்றில் மீண்டும் வெள்ளம் முறைப்படுத்தப்படுமா தண்ணீர் திறப்பு
சிங்கம்புணரி பாலாற்றில் மீண்டும் வெள்ளம் முறைப்படுத்தப்படுமா தண்ணீர் திறப்பு
ADDED : அக் 27, 2024 06:13 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பாலாற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறப்பை முறைப்படுத்த கீழ்வடிப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை சுற்றுவட்டாரத்தில் பெய்யும் கனமழை காரணமாக அங்கிருந்து உருவாகி மதுரை மாவட்டம் பள்ளப்பட்டி, சிங்கம்புணரி வழியாக வரும் பாலாற்றில் இரண்டாவது முறையாக நேற்று வெள்ளம் வந்தது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ஆற்றில் பெருவெள்ளம் வரும்போது மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. குறைவான தண்ணீர் வரும்போது மேற்கே உள்ள அணைக்கட்டு, தடுப்பணைகளில் தண்ணீர்முழுவதும் தடுக்கப்பட்டு அப்பகுதி கண்மாய், குளங்களுக்கு தொடர்ந்து பாய்ச்சப்படுகிறது.
இதனால் கீழ்படி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். சில அணைக்கட்டுகளில் தண்ணீர் திறப்பை அப்பகுதி தனி நபர்கள் கையாள்வதால், ஆற்றில் தண்ணீர் திறப்பது தடைபடுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அணைக்கட்டுப் பகுதிக்கு பார்வையிட செல்வதே இல்லை. இதனால் கரையோரங்களில் உள்ள ஏராளமான தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி அழிந்து, தற்போது வீட்டு மனைகளாக மாறிவிட்டது.
எனவே தண்ணீர் திறப்பில் தனியாரின் தலையீடு இல்லாமல், அதிகாரிகள் முழுமையாக கையாண்டு பாரபட்சமில்லாமல் கீழ் வடிப்பகுதி வரை தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.