
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் ஊர்க்காவலன் சாமி கோயிலில் பொங்கலை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
ஊர்காவலன் சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளன்று விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் பெருகவும் திருவிளக்கு பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.
பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். முன்னதாக ஊர்க்காவலன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை வில்லியரேந்தல் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

