/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே ஸ்டேஷன் முன்பு தீப்பற்றிய கார்
/
ரயில்வே ஸ்டேஷன் முன்பு தீப்பற்றிய கார்
ADDED : டிச 10, 2025 09:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். நேற்று காலை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை செல்வதற்காக, காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு தனது மனைவியுடன் காரில் வந்துள்ளார்.
டிரைவர் சரவணன் காரை ஓட்டி வந்துள்ளார். ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி ரயிலுக்கு சென்றுள்ளார். டிரைவர் சரவணன் காரிலிருந்த பொருட்களை கொடுத்துவிட்டு, மீதி பொருட்களை எடுப்பதற்காக திரும்பி வந்துள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது காரில் தீப்பற்றி எரிந்துள்ளது. தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. கார் முற்றிலும் எரிந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

