/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தானியங்கி கேட்களில் மேம்பாலம் ரயில்வே நிர்வாகம் முடிவு
/
தானியங்கி கேட்களில் மேம்பாலம் ரயில்வே நிர்வாகம் முடிவு
தானியங்கி கேட்களில் மேம்பாலம் ரயில்வே நிர்வாகம் முடிவு
தானியங்கி கேட்களில் மேம்பாலம் ரயில்வே நிர்வாகம் முடிவு
ADDED : டிச 10, 2025 09:07 AM
திருப்புவனம்: தமிழகம் முழுவதும் தானியங்கி ரயில்வே கேட்களை மூடிவிட்டு மேம்பாலம், சப்வே அமைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் அகல ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில் தானியங்கி ரயில்வே கேட்கள் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 8ம் தேதி கடலுார் செம்மங்குப்பம் தானியங்கி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் மூன்று மாணவர்கள் உட்பட சிலர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தை அடுத்து தானியங்கி ரயில்வே கேட்களை மூடிவிட்டு மேம்பாலம் அல்லது சப்வே அமைக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான பாதையில் 88 இடங்களில் ரயில் பாதையில் சாலை குறுக்கிடுகிறது. இந்த இடங்களில் சப்வே மற்றும் தானியங்கி (இன்டர்லாக் கேட்) உள்ளது. சப்வே இன்றி தானியங்கி கேட்கள் உள்ள இடங்களில் சாலையோரம் நான்கு திசைகளிலும் மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
சிலைமான், கழுகேர்கடை, வன்னிகோட்டை, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட 23 கேட்களில் முதல் கட்ட மண் பரிசோதனை தொடங்கி உள்ளது. மதுரை- ராமேஸ்வரம் வழித்தடத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் ஏழு இடங்களில் மண் ஆய்வு முடிந்துள்ளன. மீதி உள்ள இடங்களில் ஆய்வு நடத்திய பின் மேம்பாலம், சப்வே அமைக்கப்பட உள்ளது.

