ADDED : டிச 10, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் 2026 சட்டசபை தேர்தலுக்கு தொகுதி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
மாவட்ட தேர்தல் அலுவலராக கலெக்டர் பொற்கொடி செயல்படுவார். காரைக்குடி தொகுதி தேர்தல் அலுவலராக தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், திருப்புத்துார் தொகுதி தேர்தல் அலுவலராக மாவட்ட உதவி கமிஷனர் (ஆயம்) வி.சிவபாலன், சிவகங்கை தொகுதி தேர்தல் அலுவலராக கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, மானாமதுரை (தனி) தொகுதி தேர்தல் அலுவலராக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

