ADDED : டிச 09, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவி களுக்கான திருக்குறள் முற்றோதல் போட்டி நடத்தப்பட்டது.
தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சிவப் பிரகாஷ் தலைமை வகித்தார். நடுவர்களாக பேராசிரியர் அமுதா, பரமேஸ்வரி, பாரதிராணி, ஆசிரியை ஜான்சி, தாமரை செல்வி இருந்தனர்.
போட்டியில் காரைக்குடி டி.டி., நகர் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சுதர்சன், ஆயிஷா பர்வீன், ஷர்மிதா, ஹாசினி, திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளி மாணவி நர்மதா, தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ்., தொடக்கபள்ளி மாணவர் அக் ஷிதன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

