/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் கடந்த ஆண்டு கொடி நிதி ரூ.1.34 கோடி வசூல்
/
சிவகங்கையில் கடந்த ஆண்டு கொடி நிதி ரூ.1.34 கோடி வசூல்
சிவகங்கையில் கடந்த ஆண்டு கொடி நிதி ரூ.1.34 கோடி வசூல்
சிவகங்கையில் கடந்த ஆண்டு கொடி நிதி ரூ.1.34 கோடி வசூல்
ADDED : டிச 08, 2025 06:49 AM
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கொடி நாள் விழா நடைபெற்றது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார்.
கலெக்டர் பேசியதாவது, கடந்த ஆண்டு சிவகங்கைக்கு அரசு நிர்ணயித்த ரூ.1.26 கோடி இலக்கிற்கு மேலாக ரூ.1.34 கோடி வரை கொடி நிதியாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளோம். முன்னாள் படைவீரர்கள் சுய தொழில் துவங்க ஏதுவாக மாவட்ட தொழில் மையம் மூலம் பயிற்சிகள், வங்கி கடனுதவிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும்.
இம்மாவட்டத்தில் 2,302 முன்னாள் படைவீரர்கள் உள்ளனர். நடப்பாண்டில் 220 பயனாளிகளுக்கு ரூ.67.18 லட்சம் மதிப்பில் திருமண உதவி தொகை, நோய் நிவாரண நிதி, முதியோர் ஓய்வூதியம், ஆயுட்கால மாதாந்திர நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.5.50 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளோம் என்றார். முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் விஜயகுமார், கர்னல் தென்னரசு, சுபேதார் சபீர்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

