/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விறகு லாரிகளால் விபத்து அச்சம்
/
விறகு லாரிகளால் விபத்து அச்சம்
ADDED : டிச 08, 2025 06:49 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் போடப்பட்டுள்ள விறகு கடைகள் மற்றும் லாரிகளால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
இப்பேரூராட்சியில் மாவட்ட எல்கையான வேட்டையன்பட்டியில் இருந்து மருதிப்பட்டி வரை ரோட்டோரத்தில் பல்வேறு விறகு கடைகள் இயங்கி வருகின்றன. மாலை நேரங்களில் ரோட்டோரத்தில் லாரிகளை நிறுத்தி விறகுகளை ஏற்றி இறக்குவதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் பலர் விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக வளைவுகளில் டூவீலரில் வருபவர்கள் இக்கடைகள், லாரிகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக விறகு கடைகளை போடாதவாறும், லாரிகளை நிறுத்தாமலும் போலீசாரும் நெடுஞ்சாலைத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

