ADDED : டிச 08, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் நானோ அறிவியல் மற்றும் நவீன இயற்பியலில் உருவெடுத்து வரும் முன்னணிகள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
இயக்குநர் அருணாசலம் தலைமை வகித்தார். பேராசிரியர் முருகேஸ்வரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் நாவுக்கரசு துவக்கிவைத்தார். ஒருங்கிணைப்பாளர் விஜய் பிரசாத் மாநாடு பற்றி பேசினார். கோவிலூர் கல்லூரி முதல்வர் சந்திரமோகன், காரைக்குடி அழகப்பா பல்கலை பேராசிரியர் ராமலிங்கம், கோபால், தாய்லாந்து பல்கலை பேராசிரியர் மணிகண்டன், மருதப்பன், அழகப்பா கல்லூரி கருணாகரன், பிரவீன் குமார் பேசினர்.
நிறைவு விழாவிற்கு சவுந்தரம் வரவேற்றார். மாநாட்டில் அமல்ராஜ் நன்றி கூறினர். அமைப்பு குழுவினர் ஜெனித் அமல் பிரிட்டோ, கவிதா மாநாட்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

