/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீண்டும் வங்கி பெயரில் உலா வரும் மோசடி லிங்க்
/
மீண்டும் வங்கி பெயரில் உலா வரும் மோசடி லிங்க்
ADDED : டிச 08, 2025 06:47 AM
திருப்புவனம்: திருப்புவனம் முழுவதும் மீண்டும் பாரத ஸ்டேட் வங்கி பெயரில் மோசடி லிங்க் உலா வர தொடங்கியுள்ளது.
கடந்தாண்டு பாரத ஸ்டேட் வங்கி பெயரில் அதன் லோகோ உடன் வாட்ஸ் ஆப்- ல் பலருக்கும் லிங்க் அனுப்பப்பட்டது. வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள ஒரு நபருக்கு அனுப்பினால் தொடர்ச்சியாக அந்த குரூப்பில் உள்ள நபர்கள், அவர்களின் நண்பர்கள் என அனைவருக்கும் அந்த லிங்க் செல்கிறது. லிங்க்-ல் உங்கள் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படவில்லை.
எனவே உங்களது கணக்குகள் முடக்கப்பட உள்ளது. எனவே கீழே உள்ள லிங்க் - ஐ கிளிக் செய்து ஆதார் எண்ணை இணைக்க சொல்கிறது. அந்த லிங்க் ஐ கிளிக் செய்தால் அவர்களது வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதையும் சுருட்டி விடுகின்றனர்.
ஏற்கனவே இந்த லிங்க் ஐ கிளிக் செய்து பலரும் பணத்தை இழந்த நிலையில் மீண்டும் வாட்ஸ்ஆப் லிங்க் ஐ கிளிக் செய்ய கோரி பலருக்கும் வந்த வண்ணம் உள்ளது. எனவே பொதுமக்கள் தெரியாத லிங்க் ஐ கிளிக் செய்ய வேண்டாம். சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளுக்கு நேரில் சென்று சரிபார்த்து கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

