/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கார்கள் மோதல்: போக்குவரத்து பாதிப்பு
/
கார்கள் மோதல்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 19, 2025 05:30 AM

திருப்புவனம்: மதுரை- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் இப்ராஹிம் கனி 48, இவர் நண்பர் சரவணன் 20, உடன் மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு காரில் சென்றார்.
திருப்புவனம் அருகே நரிக்குடி விலக்கில் சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை வலது புறம் திருப்பிய போது எதிரே ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு பிரதீப் 36, என்பவர் ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்திற்குள்ளானது.
விபத்தில் இரண்டு கார்களின் முன்புறமும் சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரோட்டில் கார் பாகங்கள் சிதறி கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

