/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் மோதல் 30 பேர் மீது வழக்கு
/
இளையான்குடியில் மோதல் 30 பேர் மீது வழக்கு
ADDED : நவ 02, 2024 09:05 AM
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள வேலடிமடை விநாயகர் கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு பிரிவினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டு சமாதான கூட்டம் நடத்தி சாமி கும்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு பிரிவினர் அக். 31ம் தேதி மற்றொரு பிரிவினரது வீடுகளின் ஓடுகளை அடித்து நொறுக்கி பொருட்களை சேதப்படுத்தினர்.
மேலும் சந்திரன், சரவணன், பெரியசாமி ஆகிய 3 பேரை கல்லால் தாக்கியதில் காயமடைந்து இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலமுருகன் என்பவர் இளையான்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வேலடிமடை கிராமத்தைச் சேர்ந்த தனபால், ஆனந்தகுமார், மாதவன், முத்துச்சாமி, முத்து இருளன், தினகரன், செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்,கோச்சடை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன், தினேஷ்குமார் மற்றும் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.