/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண்ணை தாக்கியவர் உட்பட 6 பேர் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கியவர் உட்பட 6 பேர் மீது வழக்கு
ADDED : நவ 06, 2024 08:00 AM
சாலைக்கிராமம் : சிவகங்கை மாவட்டம், வடக்கு சாலைக்கிராமத்தில் குடும்ப தகராறில், தம்பி மனைவியின் உதட்டை கடித்தவர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
இளையான்குடி அருகே வடக்கு சாலைக்கிராமம் வீரன் மகன்கள் இரட்டையர்கள் ராமன் 56, லட்சுமணன் 56. இவர்களது இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் ராமன், தனது தம்பி லட்சுமணனின் மனைவி தங்கம் என்பவரின் உதட்டை கடித்து காயப்படுத்தினார்.
இவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து இரு தரப்பினரும் சாலைக்கிராமம் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் ராமன், அவரது மனைவி வனிதா மற்றும் மகேஷ், லட்சுமணன், அவரது மனைவி தங்கம், லட்சுமணன் மகன் சேதுபதி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்தனர்.