/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றிய 4 பேர் மீது வழக்கு
/
திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றிய 4 பேர் மீது வழக்கு
திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றிய 4 பேர் மீது வழக்கு
திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றிய 4 பேர் மீது வழக்கு
ADDED : மே 23, 2025 12:14 AM
மானாமதுரை: மானாமதுரை சாஸ்தா நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் குகன், இவர் கோவையில் உள்ள கல்லுாரியில் படிக்கும் போது அதே கல்லுாரியில் வேறொரு வகுப்பில் படித்த கோவையைச் சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். கல்லுாரி படிப்பை முடித்தவுடன் வேலைக்காக சிங்கப்பூர் சென்ற நிலையிலும் இவர்கள் இருவரும் அலைபேசி மூலமாக தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.
கடந்த மாதம் 27ம் தேதி சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த குகன், பெண்ணின் குடும்பத்தினர் சம்மதத்துடன் அங்குள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.
சில நாட்கள் கழித்து மானாமதுரையில் உள்ள வீட்டிற்கு சென்ற குகன் கோவைக்கு வராமலும் மனைவியை தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் மானாமதுரைக்கு வந்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது அவர்கள் இந்தத் திருமணம் எங்களுக்கு ஒத்து வராது, ஆகவே நீ உனது வீட்டிற்கு சென்று விடு என கூறியதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குகன்,அவரது தந்தை கண்ணன்,தாய் செல்வகுமாரி, சகோதரி கயல் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.