/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு
/
அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 02, 2025 11:11 PM
திருக்கோஷ்டியூர் : திருப்புத்துார் ஒன்றியம் ஆத்தங்கரைப்பட்டியில் கருப்பர் கோயில் திரு விழாவை முன்னிட்டு அனுமதியில்லாமல் நடந்த மஞ்சுவிரட்டு குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஆத்தங்கரைப்பட்டி சின்னக்கருப்பர், பெரியகருப்பர் கோயில் ஆடி படைப்புத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடந்தது. பாரம்பரிய முறையில் கிராமத்தினர் கோயிலில் வழிபாடு முடித்த பின்னர் தொழுவிற்கு வந்து கிராம கோயில் காளை அவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் தொழுவிலிருந்து அவிழ்க்கப்பட்டது.
மேலும் தொழுவிற்கு வெளியே வயல்களில் கட்டுமாடுகளாகவும் காளைகள் அவிழ்க்கப்பட்டன. மாடுகளை பிடிக்க முயன்ற தில் 6 பேர் காயமடைந்தனர். அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடத்தப்பட்டதால், ஏற்பாட்டாளர்கள் 5 பேர் மீது திருக்கோஷ்டி யூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.